பெயரெச்சத்திற்கு முடிபு உணர்த்துதல் நுதலிற்று.
இ - ள். பெயரெச்சமாகவுடைய சொல் பெயரொடு முடிவு பெறும், எ - று.
எ - டு. 1“துறக்குவ னல்லன் றுறக்குவ னல்லன். தொடர்வரை வெற்பன் றுறக்குவனல்லன். றொடர்பு ளினையவை தோன்றின்” என்ற வழி, அவன் தொடர்பு என வேண்டுதலின், அவன் என்னும் பெயர் எஞ்சி நின்றது. 2“உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே” என்பதனுள், என்மனார் ஆசிரியர் என வேண்டுதலின்; ஆசிரியர் என்னும் பெயர் எஞ்சி நின்றது. “மருந்தெனின் மருந்தே வைப்பெனின் வைப்பே, அரும்பிய சுணங்கி னம்பகட் டிளமுலைப், பெருந்தோ ணுணுகிய நுசுப்பிற், கல்கெழுகானவர் நல்குறு மகளே.” (குறுந்-எக) இதனுள் எனக்கென வேண்டுதலின், வேற்றுமை ஏற்ற பெயர் எஞ்சி நின்றது.
(34)
1. கலி-41. பக்கம்-123 உரை காண்க.
2. கிளவி-சூ-1.