ஒழியிசை எச்சத்திற்கு முடிபு

427.ஒழியிசை எச்சம் ஒழியிசை முடிபின.

ஒழியிசை எச்சத்திற்கு முடிபு உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். ஒழிந்த சொல்லை எச்சமாக உடையது அவ்வொழிந்த சொல்லினாற் பொருள் முடிவுபெறும், எ - று.

எ - டு. இவர் கல்வியாற் குறைவிலர் என்றவழி, ஒழுக்கத்தாற் குறையுடையர் என்றாதல், பொருளாற் குறையுடையர் என்றாதல், ஒருபொருள் குறித்த வழி, பொருள்பட்டவாறும், அதனானே, அச்சொல் முற்றுப்பெற்றவாறுங் கண்டுகொள்க.

(35)