எதிர்மறையெச்சம் முடியுமாறு உணர்த்துதல் நுதலிற்று.
இ - ள். எதிர்மறைப் பொருண்மையை எச்சமாகவுடையது அவ்வெதிர்மறையாற் பொருண்முடிவு பெறும், எ - று.
எ - டு. “இம்மைப் பிறப்பிற் பிரியல மென்றேனாக்--கண்ணிறை நீர்கொண்டனள்” (குறள்-மணக்-13-12) என்பதனுள், மறுபிறப்புப் பிரிவேம் என நினைத்துக் கண்ணிறை நீர்கொண்டனள் எனப் பொருளுரைக்க வேண்டுதலின், எதிர்மறை, எஞ்சி நின்றதன் எதிர்மறைப் பொருளொடு முடிந்தவாறு கண்டுகொள்க.
(36)