வியங்கோள் எண்ணுப்பெயர்

43.

வியங்கோள் எண்ணுப்பெயர் திணைவிரவு வரையார்.

ஐயமறுத்தலை நுதலிற்று

என்னை? வினையியலுள் வியங்கோள் இருதிணைக்கும் பொது என்றாராயினும், எண்ணுங்கால் தனித்தனி எண்ணல் வேண்டுமோ, விரவி எண்ணல் வேண்டுமோ என்ன நின்ற ஐயம் நீக்குதலின். இது திணை வழு வமைதியுமாம்.

இ - ள்.வியங்கொள்ளும் எண்ணுப் பெயர் திணை விரவுதல் நீக்கார், எ - று

எ - டு. ஆவும் ஆயனுஞ் செல்க எனவரும்.

(43)