சொல்லெச்சம் ஆமாறுணர்த்துதல் நுதலிற்று. இ - ள். சொல் என்னும் எச்சம் அச்சொல்லாவதற்கு முன்னும் பின்னும் மற்றொரு சொல் எஞ்சிநிற்ற லிலது, எ - று. எனவே, அச்சொல்லினானே உய்த்துணர்ந்து கொள்ளப் பிறிதொரு பொருள் வரும் என்றவாறாம். எ - டு.1‘நெடும் புனலுள் வெல்லு முதலை யடும்புனலி, னீங்கினதனைப் பிற’ 2“காலாழ் களரி னரியடுங் கண்ணஞ்சா, வேலாண் முகத்தகளிறு” என்றவழித், தமது நிலத்தில் எளியாரும் வலியராவர் பிறர் நிலத்தில் வலியாரும் எளியராவர் என்னும் பொருண்மை இச்சொற்றானே யுணர்த்தலிற் சொல்லெச்சமாயிற்று. (42)
1. குறள்-495. 2. குறள்-500.
|