மேலதற்கோர் வழுவமைதி உணர்த்துதல் நுதலிற்று.
இ - ள். மேற் சொல்லப்பட்டவற்றுள், கொடு என்னுஞ் சொல் படர்க்கையாயினும், தன்னைப் பிறன்போற் கூறுங் குறிப்பினாற் றன்னிடத்தியலும் என்று சொல்லுவர் புலவர், எ - று.
தன்னைப் பிறன்போற் கூறுதலின் குறிப்பெச்சமாயிற்று. இச்சூத்திரத்தானும் குறிப்பெச்சம் அதிகாரப்பட்டவாறு கண்டுகொள்க.
(46)