வேறு வினைப்பொதுச்சொல் முடியுமாறு

44.

வேறுவினைப் பொதுச்சொல் 1ஒருவினை கிளவார்.

மரபு வழுக்காத்தலை நுதலிற்று.

இ - ள். பல வினையை யுடைய பொதுப் பெயரை ஒரு வினையாற் கூறார் அறிவோர், எ - று. எனவே, பொதுவினையாற் கிளத்தல் வேண்டும், எ - று.

அது, இயம் என்பது கொட்டுவனவும் எறிவனவும் ஊதுவனவும் ஆம். அதனை இயம் கொட்டினார், ஊதினார், எறிந்தார் என்னற்க;

பொதுவினையால் இயம்பினார் என்க. பிறவும் அன்ன.

(44)


1. ஒரூஉ வினைகிளவார் என்பதும் பாடம் (இளம்பூரணர் உரை)