இதுவும் முன்னிலை வினைச்சொற்கண் வருவதோர்
வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று.
இ - ள். முன்னிலை வினைச்சொற்கண் ஈகாரமும்-மகரமூர்ந்த-ஏகாரமும் முன்னிலை மரபினையுடைய மெய்யை ஊர்ந்துவரும், எ - று.
முன்னிலை மரபின் மெய்யாவன உண், தின் என்னுஞ் சொற்கண் ஈற்றெழுத்தோடு பால்காட்டும் எழுத்தினைப் புணர்க்க இடையே வரும் மெய்யெழுத்து.
எ - டு. “சென்றீ பெருமநிற் றகைக்குநர் யாரோ” (அகம்-46.) “அட்டி லோலை தொட்டனை நின்மே” (நற்றிணை-300.) 2“இன்னாதுறைவி யரும்படர் களைமே” எனவரும். மேல் ஓதப்பட்ட இ, ஐ, ஆய் அன்றி இவையுஞ் சிறுபான்மை வருமெனக் கொள்க.
(49)
1. அந்நிலை ஏனை உரைப்பாடங்கள்.
2. புறம்-145.