மேலதற் கோர் புறனடை

445.இடைச்சொல் லெல்லாம் வேற்றுமைச் சொல்லே

இடைச்சொற்கண் எஞ்சி நின்றதோர் பொருள் நிகழ்ச்சி
உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். இடைச் சொற்கள் எல்லாம் வேற்றுமைச் சொல்லாம், எ - று.

என்பது என் சொன்னவாறோவெனின், பெயரும், வினையும் போலப் பொருளை நேர்காட்டாது, ஐ, ஒடு, கு, இன், அது, கண் என்னும் வேற்றுமை யுருபுபோல, வேறுபட்ட பொருளைக் குறித்து நிற்றலின், இடைச்சொல்லும் பொருள் வேறுபடுக்குஞ் சொல் எனப்படும்; பொருளுணர்த்துஞ் சொல்லெனப் படா. மன் என்பது கழிவினும், ஆக்கத்தினும், ஒழியிசையினும் வந்தவழித், தானிடைப்பெற்று நிலைமொழியின் வேறுபட்ட பொருளைக் குறித்து நின்றதல்லது, அப்பொருட்கு வாசகமன்றி நின்றமை கண்டு கொள்க. பிறவுமன்ன.

(53)