உரிச்சொல் மருங்கினும் இடைநின்று பொருளுணர்த்துஞ்
சொல்லுள என்பது உணர்த்துதல் நுதலிற்று.
இ - ள். உரிச்சொல்லிடத்தும் வேற்றுமை யுருபுபோல அப்பொருள் வேறுபடுத்தற்குரியவை உரியவாம். எ - று.
அது நனி என்பது உறுவும், தவவும்போல மிகுதி குறித்து வரினும், உறுவன, தவவன, எனப்பொருளுணர வாராது, இடைச் சொற் போலக் குறிப்பினான் மிகுதி யுணர்த்துதலின், இதுவும் பொருள் வேறுபடுக்குஞ் சொல்லாயினல்லது, பொருளுணர வாராமை கண்டுகொள்க. பிறவும் அன்ன.
(54)