மேலதற்கோர் புறனடை யுணர்த்துத னுதலிற்று
இ - ள். உரையென்பது தொடர்மொழி. முற்றுச்சொல் எச்சமாகி வருதலும், வினையெச்சமீறுதிரிதலும், தொடர்மொழிக் கண் முடிக்கும் சொல்லொடு கூடிநின்ற நிலைமையை யறிந்து கொள்க, எ - று.
“மோயின ளுயிர்த்தகாலை” என்றவழி, உயிர்த்தலென்னும் வினையொடு நிற்றலின் மோயினளென்ப தெச்சமாயிற்று. அல்லாதவழி முற்றாயே நிற்கும். ஞாயிறு பட்டுவந்தான் என்றவழி, வந்தான் என்பதற்குப் பட்டென்பதில்லாமையிற் பட எனத் திரித்தல் வேண்டிற்று. பிறவு மன்ன.
(56)