இது செப்பு வழுக்காத்தலை நுதலிற்று இ - ள். இரட்டித்துச் சொல்லப்படும் சொற்கள் அவ்விரட்டித்தலிற் பிரிந்து ஒலியா, எ - று. எ - டு. ஒன்றொன்றாக வந்தன. இரண்டிரண்டாக நீக்குக என வரும். இவை ஒன்றாக வந்தன. இரண்டாக நீக்குக என்ற வழிப் பொருண்மைப் படாமையால் பிரிந்தொலியா வாயின. (46)
1. இரட்டுப் பிரிந்திசையா என்பது இளம்பூரணர் பாடம்.
|