பல பொரு ளொருசொற் பாகுபடுமாறு உணர்த்துதல்
நுதலிற்று.
இ - ள். பலபொருளுணரவருஞ் சொல்லாவன பலபொருட்கும் தனித்தனிப் பெயராகி வருவதூஉம் பலபொருளொரு சொல்லாம்: பலபொருட்கும் பொதுப்பெயராகி வருவதூஉம் பலபொருளொரு சொல்லாம், அவற்றுள் வினைவேறுபடூஉம் பலபொருளொரு சொல்லாவன; மா, வேங்கை எனவும், மக்கள், பெற்றம் எனவும் வருவன, வினைவேறுபடா அப் பலபொருளொரு சொல்லாவன: சேவல், பெடை யென்பன. அவற்றுக்கு உதாரணம் வருகின்ற சூத்திரத்தாற் காட்டுதும்.
(50)