இ - ள். தெரிந்து வேறுபடுக்கவருஞ் சொல்லைக் கிளந்துரைத்தலே யன்றி, குறித்தோன் கூற்றமும் ஆம், எ - று.
உம்மும் ஆமும் எஞ்சி நின்றன.
எ - டு. நிவந்தோங் குயர்கொடிச் சேவலோய் (பரி; 3 : 18) என்றவழிச் சொல்லுவான் குறிப்பு மாயவனை நோக்கலிற் கருடனாயிற்று. சேவலங் கொடியோன் காப்ப (குறு - 1) என்றவழிச் சொல்லுவான் குறிப்பு முருகவேளை நோக்குதலிற் கோழியாயிற்று, பிறவும் அன்ன.
(54)