மேலதற்கோர் புறநடை
மேலதற்கோர் புறநடையுணர்த்துதல் நுதலிற்று.
இ - ள். மேல் உயர் திணைக்கட் பால் பிரிந்திசையா என்று ஓதப்பட்டன வெல்லாம் அத்திணை யுணர நின்றனவேனும். அவ்வாறு உயர்திணை யுணரநின்று ஒலித்தல் இவ்விடத்து வழக்கின்று, எ - று. இவ்விடம் என்றது உயர்திணையை.
(57)