மேற்கூறப்பட்ட சொற்கள் பாலுணர வருமாறு உணர்த்துதல்
நுதலிற்று. வழுவமைதியும் ஆம்.
வேறிடம் என்பது அஃறிணையை.
இ - ள். மேல் பால் பிரிந்திசையா என ஓதப்பட்ட சொற்கள் அஃறிணையாய் இசைத்தலும் உரிய, எ-று. உம்மை எச்சவும்மை ஆகலான் அஃறிணைக்குரிய சொல்லான் அன்றி இருதிணைக்கும் பொதுவாகி சொல்லானும் இசைத்தலும் உரிய, எ-று.
எ - டு:- காலம் வந்தது, வரும். உலகு கிடந்தது. உயிர் போயிற்று, உடம்பு விட்டது. தெய்வம் தந்தது. வினை விளைந்தது. பூதம் செறிந்தது. ஞாயிறு எழுந்தது. திங்கள் எழுந்தது. சொல் பயன் தந்தது. வியாழம் எழுந்தது. வெள்ளி பட்டது. பரணி தோன்றிற்று. பூதம் புடைத்தது. பேய் பிடித்தது. பிறவும் அன்ன.