|
பெண்பால் ஈறு | 6. | ளஃகான் ஒற்றே மகடூஉ அறிசொல். |
| மகடூஉ வறிசொல் உணர்த்துதல் நுதலிற்று. இ - ள்.ளகாரமாகிய ஒற்றை அந்தமாகவுடைய சொல் பெண்பால் உணரவருஞ் சொல், எ-று. ஏகாரம் ஈற்றசை, (எ - டு.) உண்டாள், உண்ணாநின்றாள், உண்பள்; இவை வினை, கரியள், குறியள் இவை வினைக்குறிப்பு. அவள், திருவினாள்; இவை பெயர். (6)
|
|