இது எழுவாய் வேற்றுமைக்கு உரியதோர் புறநடை
உணர்த்துதல் நுதலிற்று.
இ - ள். மூன்றிடத்துப் பெயரும் வெளிப்படத் தோன்றி, பயனிலையோடு நிற்றல் செவ்விது, எ - று.
எனவே, வெளிப்படத் தோன்றாது பயனிலை கோடல் செவ்விது அன்று என்றவாறாம்.
அவையாவன ;-(1) ‘சோறு உண்ணாயோ சாத்தா’ என்ற வழி ‘உண்பல்’ என்பது. இச் செப்பின்கண் ‘யான் உண்பல்’ என எழுவாயும் பயனிலையுமாக நிற்கற்பாலது ‘உண்பல்’ என்னும் பயனிலை வெளிப்பட்டு ‘யான்’ என்னும் பெயர் தோன்றாது நிற்பினும். அப்பொருள்பட நிற்றலின் அத்தொடர் வழு எனப் படாமையால் வெவ்விதன்று ஆயிற்று. இஃது இத்தொடர்ச்சிக்கண் வழுவமைத்தவாறு. இது தன்மை.
(2) ‘யான் யாது வெய்வல்’ என்றானை ‘இது செய்’ என்பது, இதன்கண் ‘நீ’ என்னும் பெயர் வெளிப்படாது நின்றது. இது முன்னிலை.
(3) ‘அவன் யார்’ என்றார்க்குப் 1‘படைக்கை மறவன்’ என்றவழி 4அவன்’ என்னும் பெயர் தோன்றாது நின்றது. இது படர்க்கை.
அஃதேல், இவை, பெயரெச்சம் என்று எச்சவியலுள் (34) கூறுகின்றதனுள் அடங்காதோ வெனின், அடங்குமாயினும், எழுவாயும் பயனிலையும் ஆகி நிற்குங்கால், பெயர் தோன்றாது நிற்பின் வழுவாம் என்பதனால் ஈண்டுக் கூறல் வேண்டும் என்க.
இன்னும் இச் சூத்திரத்திற்குப் பொருள் வெளிப்படத் தோன்றிப் பயனிலை கோடல் செவ்விது எனவே, வெளிப்படத் தோன்றாத பெயர் திரிபு உடைய என்றவாறாம்.
அவையாவன:--இரும்பு பொன் ஆயிற்று: குயவன் குடத்தை வனைந்தான் என்றவழி, எழுவாய்க்கும் பயனிலைக்கும் இடைக்கிடந்த பொன், குடம் என்பன ஆயிற்று என்பதனோடும் வேற்றுமை யுருபினோடும் திரிந்தவாறு கண்டுகொள்க.
அஃதற்றாக, 2வனைந்தான் என்பது குயவனோடு முடிய இடைக் கிடந்த குடத்தை யென்பதற்கு முடிபு யாதோ எனின், அது ‘குடத்தை வனைந்தான்’ என ஒரு சொல் நீர்மைப் பட்டுக் ‘குயவன்’ என்பதற்குப் பயனிலையாகி நிற்பின் அல்லது வேறு முடிபு உரைக்கப்படா தென்க.
ஆயின், எழுவாயும் பயனிலையும் என எல்லாச் சொல்லும் அடங்கும், வேற்றுமை எட்டு எனல் வேண்டா எனின், குயவன் வனைந்தான் என்ற வழி, வனையப்பட்டதும், அதற்காம் கருவியும் அதனாற் பயனும். பிறவும் தோன்றுமாதலின், அப்பொருள்களே வேற்றுமையாகி இடைக்கிடக்கின்றன வென்க. இவை யெல்லாம் இடைக்கிடப்பன ஆகலின், செய்கின்றானை முன் வைக்கப்பட்டது.
(6)
1. படைத்தலைவன் என்றும் பாடம்.
2. ‘வனைந்தான் என்பதற்குக்குயவனொடு முடிக்க’ என்பதும் பாடம்.