மூன்றாம் வேற்றுமையாமாறு உணர்த்துதல் நுதலிற்று.
இ - ள். மூன்றாம் வேற்றுமையாவது ஒடுவெனப் பெயர் பெற்ற வேற்றுமைச்சொல். அது வினைமுதலுங் கருவியுமாகிய அவ்விரண்டு காரகத்தையும் உடைத்து, எ-று.
ஈண்டு, முதல் என்பது காரகம், கருத்தாவின் கண்ணும், கருவியின் கண்ணும் வரும், எ-று. கொடியொடு தொடக்குண்டான், இது வினைமுதல், “ஊசியொடு குயின்ற தூசும் பட்டும்”--இது கருவி.
(11)
1. இதனையும் அடுத்த நூற்பாவையும் ஒரே நூற்பாவாகக் கொள்வர் இளம்பூரணர்.