நான்காம் வேற்றுமையாமாறு உணர்த்துதல் நுதலிற்று.
இ - ள். நான்காம் வேற்றுமையாவது கு எனப் பெயர்பெற்ற வேற்றுமைச்சொல். அது யாதானுமொரு பொருளாயினும் ஏற்று நிற்கும் நிலைமைத்து. எனவே, ஏற்கும் பொருண்மைக்கண் வரும், எ - று.
அந்தணர்க்குக் கொடுத்தான் எனவரும்.
(13)
1. இதனையும் அடுத்த நூற்பாவையும் ஒரே நூற்பாவாகக் கொள்வர் இளம்பூரணர்.