ஒன்றன் பால் ஈறு

8.ஒன்றறி கிளவி தறட ஊர்ந்த
குன்றிய லுகரத் திறுதி யாகும்.

அஃறிணை யொருமை யுணரவருஞ் சொல் உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். த, ற, டக்களை யூர்ந்த குற்றுகரத்தினை ஈறாகவுடையன ஒன்றனை அறியுஞ் சொற்களாம். எ-று.

எ - டு. உண்டது, உண்ணாநின்றது, உண்பது, கூயிற்று, உண்டு; இவை வினை. கரிது. கோடின்று, குண்டுகட்டு; இவை வினைக்குறிப்பு. அது, ஒன்று, இரண்டு, இவை பெயர்.

(8)