இதுவுமது

84.கன்றலும் செலவும் ஒன்றுமார் வினையே.

இதுவும் அது.

இ - ள். கன்றலும் செலவும் ஆகிய வினைப் பொருண்மை மேற் சொல்லப்பட்ட இரண்டாவதனோடும். ஏழாவதனோடும் ஒன்றித் தோன்றும், எ-று.

இரண்டும் ஏழும் என்பது மேலைச்சூத்திரத்தினின்றும் தந்துரைக்கப் பட்டது.

எ - டு. சூதினைக் கன்றினான்; சூதின்கண் கன்றினான். நெறியைச் சென்றான்; நெறிக்கண் சென்றான். அவை பொருளுமாகி இடமுமாகி நிற்றலின் இரண்டற்கும் உரிய வாயின.

(3)