முதல் சினைக் கிளவி யாமாறு உணர்த்துதல் நுதலிற்று.
இ - ள். முதல் சினை என்பன பொருளால் நியமம் இல. அவற்றைச் சொல்லுமிடத்துச் சொற்குறிப்பினால் அறியப்படும். எ - று.
என்றது:--ஒரு காற் சினையாகி வந்தது தானே ஒரு கால் முதலும் ஆகிவரும் என்றவாறு.
எ - டு. கோட்டது நுனியைக் குறைத்தான். கோட்டை நுனிக்கட் குறைத்தான். கோட்டை நுனியைக் குறைத்தான் எனவரும்.
(5)