இரண்டாவதும் மூன்றாவதும் மயங்குமாறு உணர்த்துதல் நுதலிற்று. இ - ள். ஓம்படுத்துச் சொல்லுதற்கண் வருஞ் சொற்கண், உருபு தொகையாகி வருங்காலத்து, இரண்டாவதும், மூன்றாவதும் நீங்குதல் இல. எனவே இரண்டாவதன் பொருளும் மூன்றாவதன் பொருளும் படும், எ - று. எ - டு. ‘அறம் போற்றி வாழ்மின்’ என்றவழி, அறத்தைப் போற்றி வாழ்மின் எனப் போற்றப்படுவது அறம் என்னும் பொருளும் பட்டது. அறத்தாற் போற்றி வாழ்மின் எனப் போற்றப்படுவார் தாம் என்னும் பொருளும் பட்டது. (12)
|