கொடைப்பொருளில் நான்காவதும் ஆறாவதும் மயங்கல்

94.

1குத்தொக வரூஉங் கொடையெதிர் கிளவி
அப்பொரு ளாறற் குரித்து மாகும்.

நான்காவதோடு ஆறாவது மயங்குமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். நான்காம் உருபு தொக எதிர்காலம் பற்றிவரும் கொடைப்பொருண்மை ஆறாவது விரித்தற்கு உரித்தும் ஆகும். எ-று.

எ - டு. ‘தேவர் பலி’ என்பது ‘தேவர்க்கு நோக்கின பலி’ என விரிதலே யன்றித் தேவரது பலி எனவும் விரியும்.

(13)


1. இங்கு, ஏனை உரையாசிரியர்கள், ஆறன் மருங்கின் என்னுஞ் சூத்திரத்தை வைத்து உரைசெய்துளார்கள்.