ஆறாவது நான்காவதனோடு மயங்குமாறு உணர்த்துதல் நுதலிற்று. இ - ள். உயர்திணைத் தொகைப்பொருண்மேல் வரும் அது வென் வேற்றுமை அது என்னும் உருபுகெடக் கு கரம் வரும், எ - று. எ - டு. நம்பி மகன் என்பதனைக் கிழமைப் பொருள்பட விரிப்புழி, நம்பிக்கு மகன் என விரியும், நம்பியது மகன் எனின் வழுவாம். (15)
|