இஃது, மெல்லெழுத்திற்கு ஓர் புறனடை கூறுதல் நுதலிற்று. மெல்லெழுத்து ஆறும் பிறப்பின் ஆக்கம் சொல்லிய பள்ளி நிலையின ஆயினும்- மெல்லெழுத்துக்களாறும் தத்தம் பிறப்பினது ஆக்கம் மேற்சொல்லப்பட்ட இடத்தே நிலை பெற்றனவாயினும், மூக்கின் வளி இசை யாப்புற தோன்றும்-அவை மூக்கின்கண்ணுளதாகிய வளியது இசையான் யாப்புறத் தோன்றும். 'யாப்புற' என்றதனான் , இடையெழுத்திற்கு மிடற்றுவளியும் வல்லெழுத்திற்குத் தலைவளியும் கொள்க. (18)
|