நூன்மரபு

3.எண்

தனிமெய்க்கு அளபு

11.மெய்யின் அளபே அரையென மொழிப.

இஃது, தனிமெய்க்கு அளபு கூறுதல் நுதலிற்று.

மெய்யின் அளபு - மெய்யது மாத்திரையினை, அரை என மொழிப ( ஒரோவொன்று) அரை மாத்திரையுடையவென்று சொல்லுவர்.

காக்கை , கோங்கு எனக் கண்டுகொள்க. ஈண்டு வேற்றுமை நயமின்றி ஒற்றுமைநயம் கருதப்பட்டது.

(11)