4. சாரியைப் புணர்ச்சி

சாரியை வருமிடம்

119.அவற்றுவழி மருங்கிற் சாரியை வருமே.

இஃது, சாரியை வரும் இடம் கூறுதல் நுதலிற்று.

அவற்றுவழி மருங்கின் சாரியை வரும்-அப் பெயர்களின் பின்னாகிய இடத்தின்கண்ணே சாரியை வரும்.

எ - டு: ஆடூஉவின் கை, மகடூஉவின் கை, பலவற்றுக் கோடு என வரும்.

(16)