நூன்மரபு

3.எண்

சார்பெழுத்துக்கு அளபு

12.அவ்வியல் நிலையும் ஏனை மூன்றே.

இஃது, சார்பிற்றோற்றத்து எழுத்து மூன்றற்கும் அளபு கூறுதல் நுதலிற்று.

அ இயல்நிலையும் மேற்கூறிய அரை மாத்திரையாகிய அவ்வியல்பின்கண்ணே நிற்கும், ஏனைமூன்று - ஒழித்த சார்பிற் றோற்றத்து மூன்றும்.

எ - டு: கேண்மியா, நாகு, எஃகு எனக் கண்டு கொள்க.

(12)