4. சாரியைப் புணர்ச்சி

னகர ஈற்றுச் சாரியை திரியுமிடம்

124.னஃகான் றஃகான் நான்க னுருபிற்கு.

இஃது, னகர ஈற்றுச் சாரியை நான்கற்கும் ஈறு திரிபு கூறுதல் நுதலிற்று.

நான்கன் உருபிற்கு னஃகான் றஃகான்-நான்காம் உருபிற்கு (னகார ஈற்றுச் சாரியையெல்லாம்) னகாரம் றகாரமாம்;

எ - டு: விளவிற்கு, கோஒற்கு, ஒருபாற்கு, அதற்கு என வரும்.

(21)