அத்து முதல் கெடுதல்
இஃது, அத்து முதல் திரியுமாறு உணர்த்துதல் நுதலிற்று.
அத்தின் அகரம் அகரமுனை இல்லை - அத்துச் சாரியையின் அகரம் அகரவீற்றுச் சொல்முன்னர் இல்லையாகும்.
எ - டு: மகத்துக்கை என வரும்.