4. சாரியைப் புணர்ச்சி

இக்கு முதல் கெடுதல்

127.இக்கின் இகரம் இகரமுனை யற்றே.

இஃது, இக்குச் சாரியை முதல் திரியுமாறு உணர்த்துதல் நுதலிற்று.

(இ-ள்) இக்கின் இகரம் இகரமுனை அற்று - இக்குச் சாரியையினது இகரம் இகர ஈற்றுச்சொல் முன்னர் மேற்கூறியவாறு போலக்கெடும்.

எ - டு: ஆடிக்குக் கொண்டான் என வரும்.

(24)