இதுவும் அது.
(இ-ள்) மென்மையும் இடைமையும் வரும்காலை-அம்மின் இறுதி மென்மையும் இடைமையும் வருமொழியாய் வருங்காலத்து; இன்மை வேண்டும் என்மனார் புலவர் - இன்றி முடிதலை வேண்டும் என்று சொல்லுவர் புலவர். எ - டு: புளிய ஞெரி, நுனி, மூரி, யாழ், வட்டு என வரும் உரையிற்கோட லென்பதனால், புளிய விலை எனவும் உயிர் வருவழிக் கேடும் கொள்க. (28)
|