5.எழுத்துச் சாரியை

எழுத்துச் சாரியைகளின் பெயர்

135.காரமுங் கரமுங் கானொடு சிவணி
நேரத் தோன்றும் எழுத்தின் சாரியை.

இஃது, எழுத்துச் சாரியைகட்குப் பெயரும் முறையும் தொகையும் உணர்த்துதல் நுதலிற்று.

(இ-ள்) காரமும் கரமும் கானொடு சிவணி - காரமும் கரமும் கானொடு பொருந்தி, நேரத்தோன்றும் எழுத்தின் சாரியை - எல்லா ஆசிரியரானும் உடன்படத் தோன்றும்; எழுத்துச்சாரியை யாதற்கு.

எ - டு: `நேரத்தோன்றும் ' என்றதனான், நேரத்தோன்றாதன ஆனம், ஓனம் என இவை.

(32)