5.எழுத்துச் சாரியை

நெட்டெழுத்துக்குச் சாரியை

136.அவற்றுள்
கரமுங் கானும் நெட்டெழுத் திலவே.

இஃது, அவற்றுட் சில சாரியை சில எழுத்தோடு வாரா என எய்தியது விலக்குதல் நுதலிற்று.

(இ-ள்) அவற்றுள் கரமும் கானும் நெட்டெழுத்து இல-மேற் சொல்லப்பட்டவற்றுள் கரமும் கானும் நெட்டெழுத்திற்கு இல.

எ - டு: காரம் நெட்டெழுத்திற்கு உண்டு என்றவாறு. ஆகாரம், ஈகாரம் என வரும்.

(33)