இஃது, நெட்டெழுத்திற்குச் சில சாரியை விலக்கினமையின் குற்றெழுத்திற்கும் சில விலக்குவதுண்டுகொல் என்னும் ஐயம் தீர்த்தல் நுதலிற்று.
(இ-ள்) வரன்முறை மூன்றும் குற்றெழுத்து உடைய - வரலாற்று முறைமையை யுடைய மூன்று சாரியையும் குற்றெழுத்து உடைய. எ - டு: அகாரம், அகரம், அஃகான் என வரும். ` வரன்முறை ' என்றதனான், அஃகான் என்புழி, ஆய்தமிக்கு முடியுமென்பது கொள்க. (34)
|