5.எழுத்துச் சாரியை

ஐ ஒளவின் சாரியை

138.ஐகார ஒளகாரங் கானொடுந் தோன்றும்.

இஃது, அவற்றுள் காரமுங் கானும் என்பதற்கு ஒரு புறனடை உணர்த்துதல் நுதலிற்று.

(இ-ள்) ஐகாரம் ஒளகாரம் கானொடும் தோன்றும் - நெட்டெழுத்துக்களில் ஐகாரமும் ஒளகாரமும் முன்விலக்கப்பட்ட கானொடும் தோன்றும்.

(35)

எ - டு: ஐகான், ஒளகான் என வரும்.