இஃது, உயிர்முதல் மொழி புள்ளியீற்றுமுன் வருங்காற் பிறப்புதோர் கருவி கூறுதல் நுதவிற்று.
(இ-ள்) புள்ளி ஈற்றுமுன் உயிர் தனித்து இயலாது - புள்ளியீற்றுச் சொல்முன் உயிர் நனித்து நடவாது, மெய்யொடு சிவணும் அ இயல் கொடுத்து - அப் புள்ளியொடும் கூடும் தான் தனிநின்ற அவ் வியல்பினைக் கெடுத்து.1 எ - டு: ஆல் + அடை - ஆலடை என வரும். " ஒன்றென முடித்தல் " என்பதனால், இயல்பல்லாத புள்ளிமுன் உயிர் வந்தாலும் இவ் விதி கொள்க. அதனை எனவும் நாடுரி எனவும் வரும். புள்ளியீற்று முன்னும் என, தொகுத்து நின்ற உம்மையை விரித்ததனானே குற்றியலுகரத்தின் முன்னும் இவ் விதி கொள்க. நாகரிது என வரும். (36)
1.`அவ்வியல் கெடுத்து ' என்பதற்கு. புள்ளிபெற்று நிற்கும் அம் மெய்யின் இயல்பைக் கெடுத்து என்றே பொருள் கொள்வது தக்கது. ` மெய்யுயிர் நீங்கின் தன்னுருவாகும் ' என்று அடுத்த நூற்பாவும் கூறுதல் காண்க. (பாவாணர் )
|