நூன்மரபு

4.வடிவு

மகரத்தின் வடிவம்

14.உட்பெறு புள்ளி உருவாகும்மே.

இஃது, பகரத்தின் மகரத்திடை வரிவடிவு வேற்றுமை செய்தல் நுதலிற்று.

உள்பெறு புள்ளி உருவு ஆகும் - புறத்துப் பெறும் புள்ளியோடு உள்ளாற்பெறும் புள்ளி மகரத்திற்கு வடிவாம்.(அஃதின்மை பகரத்திற்கு வடிவாம்.)

எ - டு: ம, ப எனக் கண்டுகொள்க, கப்பி, கப்பி (கம்மி) என வரும்.

(14)