இஃது , அவ்விரண்டு ஈற்றிற்கும் வேற்றுமைக்கண் நிலைமொழி முடிபு கூறுதல் நுதலிற்று.
(இ-ள்) வேற்றுமைக்கண்ணும் - வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்கண்ணும், வல்லெழுத்து அல்வழி - வல்லெழுத்து அல்லாதவிடத்து , மேற்கூறு இயற்கை ஆவயின் ஆன - மேற் கூறிய இயல்பு முடிபாம் அவ்விரண்டு புள்ளியிடத்தும் . எ - டு: மண் , பொன் என நிறுத்தி, ஞாற்சி, நீட்சி என வன்கணம் ஒழித்து எல்லாவற்றோடும் ஒட்டுக. (6)
|