இஃது, உயிர்மெய்யோடு தனிமெய்யிடை வடிவு வேற்றுமை செய்தல் நுதலிற்று. மெய்யின் இயற்கை தனிமெய்யினது இயல்பு , புள்ளியொடு நிலையல் - புள்ளியோடு நிற்றல் , (உயிர் மெய்யினது இயல்பு புள்ளியின்றி நிற்றல்.) க் ங் ச் ஞ் ட் ண் த் ந் ப் ம் ய் ர் ல் வ் ழ் ள் ற் ன் எனக் கண்டு கொள்க. (15)
|