1. உயிரீறு மெய்யீறுகளின் பொதுப்புணர்ச்சி

லனமுன் தநக்கள் திரிதல்

150.லனவென வரூஉம் புள்ளி முன்னர்
த ந எனவரிற் றனவா கும்மே.

இஃது , புள்ளி மயங்கியலை நோக்கியதோர் வருமொழிக்கருவி கூறுதல் நுதலிற்று.

(இ-ள்) ல ன என வரும் புள்ளி முன்னர் ல ன என்று சொல்ல வருகின்ற புள்ளிகளின் முன்னர் , த,ந, என வரின் - த, ந என வருமொழி வரின் , ற ன ஆகும் - அத் தகர நகரங்கள் நிரனிறையானே றகர னகரங்களாம்.

எ - டு: கஃறீது , கன்னன்று , பொன்றீது , பொன்னன்று என்று வரும் .

(7)