2. உயிரீறு மெய்யீறுகளின் சிறப்புப் புணர்ச்சி

அதற்குச் சிறப்பு விதி

155.அவற்றுள்
இகரஈற்1றுப்பெயர் திரிபிட னுடைத்தே.

இஃது, உயர்திணைப்பெயருட் சிலவற்றிற்கு எய்தாதது எய்து வித்தல் நுதலிற்று.

(இ-ள்) அவற்றுள் - மேற்சொல்லப்பட்ட உயர்திணைப் பெயருள் இகர ஈற்றுப் பெயர் திரிபு இடன் உடைத்து - இகர மாகிய இறுதியையுடைய பெயர் திரிந்து முடியும் இடமும் உடைத்து.

உரையிற்கோடல் என்பதனான் , இது மிக்க திரிபென்பது கொள்ளப்படும்.

எ - டு: 2எட்டிப்பூ , எட்டிப்புரவு , காவிதிப்பூ , காவிதிப்புரவு, நம்பிப்பூ , நம்பிப்பேறு என வரும்.

இடனுடைத்து என்பதனான் , இகர ஈறன்றிப் பிற ஈறும் ஈறு திரியாது வல்லெழுத்து மிக்கு வருவன ஈண்டுக்கொள்க . தினைப்பூ , தினைப்புரவு என வரும்.

(12)

1. (பாடம்)இகர இறுபெயர். (நச்.)

2. எட்டி - வணிகருட் சிறந்தோர்க்கு அரசராற் கொடுக்கப்பட்ட பட்டப்பெயர்.

காவிதி - உழுவித்துண்ணும் வேளாளருட் சிறந்தோர்க்கு அரசராற் கொடுக்கப்பட்ட பட்டப்பெயர்.(பாவாணர்)