2. உயிரீறு மெய்யீறுகளின் சிறப்புப் புணர்ச்சி

நும் என் மொழிக்கும் அவ்விதி

163.நும்மென் இறுதியும் அந்நிலை திரியாது.

இதுவும் அது.

(இ-ள்) நும் என் இறுதியும் அ நிலை திரியாது - நும் என்னும் மகரவிறுதி மேற்கூறிய ஈறாகு புள்ளி அகரமொடு நிலையலும் குற்றொற்றிரட்டாமையுமாகிய அந்நிலைமையில் திரியாது.

எ - டு: நுமக்கு, நுமது என வரும்.

(20)