இஃது, புள்ளிமயங்கியலை நோக்கியதோர் நிலைமொழிச் செய்கை கூறுதல் நுதலிற்று.
(இ-ள்) உகரமொடு புணரும் புள்ளி இறுதி - உகரப் பேற்றோடு புணரும் புள்ளியிறுதிகள், யகரமும் உயிரும் வருவழி இயற்கை - யகரமும் உயிரும் வருமொழியாய் வருமிடத்து அவ்வுகரம் பெறாது இயல்பாய் முடியும். எ - டு: உரிஞ் யானா, உரிஞ் அனந்தா; பொருந் யானா, பொருந் அனந்தா; உரிஞ் ஆதா, பொருந் ஆதா என ஒட்டுக. (21)
|