2. உயிரீறு மெய்யீறுகளின் சிறப்புப் புணர்ச்சி

அவற்றுட் குற்றுகர மொழிகட்குச் சாரியை

168.குற்றிய லுகரக் கின்னே சாரியை.

இஃது, வேற்றுமைமுடிபு விலக்கி முன் வகுத்தமையின் எய்தியது விலக்கிப் பிறிது விதி கூறுதல் நுதலிற்று.

(இ-ள்) குற்றியலுகரக்கு - குற்றுகரவீற்று அளவுப்பெயர் முதலியவற்றிற்கு, சாரியை இன் - (குறையொடு புணரும் வழி வரும்) சாரியை இன்.

எ - டு: உழக்கின்குறை, கழஞ்சின்குறை, ஒன்றின் குறை என வரும்.

(25)