இதுவும் அது.
(இ-ள்) பனை என் அளவும் கா என் நிறையும் - பனை என்னும் அளவுப் பெயரும் கா என்னும் நிறைப் பெயரும், தினையும் காலை இன்னொடு சிவணும் - (குறை என்பதனோடு புணருமிடத்து) ஆராயுங்காலத்து இன்சாரியையொடு பொருந்தும். எ - டு: பனையின்குறை, காவின்குறை என வரும். `நினையுங் காலை' என்றதனான், வல்லெழுத்துப்பேறும் சிறுபான்மை கொள்க. பனைக்குறை காக்குறை என வரும். (27)
|