3. புறனடை

இவ்வியலுக்குப் புறனடை

172.ஈறியல் மருங்கின் இவையிவற் றியல்பெனக்
கூறிய கிளவிப் பல்லா றெல்லாம்
மெய்த்தலைப் பட்ட வழக்கொடு சிவணி
ஒத்தவை உரிய புணர்மொழி நிலையே.

இஃது, இவ்வோத்துப் புறனடை.

(இ-ள்) ஈறு இயல் மருங்கின்-உயிரும் புள்ளியும் இறுதியானவை வருமொழியொடு கூடி நடக்குமிடத்து, இவை இவற்று இயல்பு என கூறிய கிளவிப் பல் ஆறு எல்லாம்-இம் மொழிகளின் முடிபு இவையெனக் கூறி முடிக்கப்பட்ட சொற்களின் (அவ்வாற்றான் முடியாதுநின்ற) பலவகை முடிபுகளெல்லாம், மெய் தலைப்பட்ட வழக்கொடு சிவணி ஒத்தவை உரிய புணர் மொழி நிலை - உண்மையைத் தலைப்பட்ட வழக்கொடு கூடிப் பொருந்தினவை உரியவாம் புணரும் மொழிகள் நிலைமைக்கண்.

எ - டு: விள ஞான்றது என்புழி நிலைமொழிப்பெயரது இயல்பும், ஞான்ற என நிலைமொழி வினையாயவழி இருமொழி இயல்புமாகிய " ஞ ந ம ய வ " (தொகை - 2) என்பதன் ஒழிபும். மாண்கடிது என்புழி வருமொழி வன்கணத்து இயல்பாகிய " மொழிமுதலாகும்" (தொகை - 5) என்பதன் ஒழிபும், நட ஞெள்ளா என்னும் இயல்பு கணத்து இருமொழி இயல்பும், நில்கொற்றா என்புழி நில்கொற்றா , நிற் கொற்றா என நிலைமொழி திரிந்த உறழ்ச்சியும், துக்கொற்றா, துஞ்ஞெள்ளா என்னும் மிகுதியும், உரிஞுஞெள்ளா என்னும் இயல்பு கணத்து உகரப்பேறும் உரிஞ்யானா, உரிஞ் அனந்தா என்னும் இரு மொழி இயல்பும் மண்ணுகொற்றா, மண்ணுக்கொற்றா, ஞெள்ளா என வரும். " ஒள வென வரூஉம் " (தொகை - 10) என்பதனுள் விலக்கப் படாத ணகர லகரமாகிய புள்ளியிறுதிகளின் நிலைமொழி உகரப் பேறுமாகிய " உயிரீ றாகிய முன்நிலைக் கிளவி " (தொகை - 9) என்பதன் ஒழிபும் ; விரவுபெயர்த் திரிபின்மேல் எடுத்து ஓதப் படாதன வாய நின்ஞாண் என்றாற்போல வரும் " அஃறிணை விரவுப்பெயர் " (தொகை - 13) என்பதன் ஒழிபும், காவிக்கண், குவளைக்கண் என்றாற் போல அவ்வழிமுடிபாகிய " வேற்றுமையல்வழி " (தொகை - 13) என்பதன் ஒழிபும், பதக்கு நானாழி, சீர்கரை, ஒருமாவரை என்னும் " உயிரும் புள்ளியு மிறுதியாகி " (குற்றியலுகரப் புணரியல்-79) என்பதன் ஒழிபும், பிறவற்றின் ஒழிபுமெல்லாம் ஈண்டேகொள்க.

(29)