1. உயிரீறுகள

'யா' என் வினாவுக்கும் வற்றுச்சாரியை

176.யாவென் வினாவும் ஆயியல் திரியாது.

இஃது, ஆகார வீற்றுள் ஒரு மொழிக்கு எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தல் நுதலிற்று.

(இ-ள்) யா என் வினாவும் அ இயல் திரியாது - யா என்று சொல்லப்படும் ஆகாரவீற்று வினாப்பெயரும் மேற் கூறப் பட்ட வற்றுப்பெறும். அவ்வியல்பில் திரியாது.

எ - டு: யாவற்றை, யாவற்றோடு என ஒட்டுக.

(3)